இவ்வாறு சாதாரணமாக வெளிப்படும் திரவமானது, சில பெண்களுக்கு மன ரீதியான உளைச்சலைக்கொடுக்கலாம். தங்களுக்கு ஏதோ நோய் இருக்கிறது அதனாலேதான் இந்நிலை ஏற்படுகின்ற து அவர்கள் கூச்சப்பட்டு வெளியில் சொல்ல முடியாமல் மனதி ற்குள்ளே வருந்திக் கொண்டிருக்கலாம்.
உண்மையில் பிறப்பு உறுப்பிலே இருந்து வெளிவருகின்ற திரவ ங்கள் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெளிவாக அறிந்து வைத்தி ருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெ றால் சில நோய்களில் கூட இவ் வாறு திரவங்கள் வெளிவரலாம்.
எவ்வாறு நோய்களினால் வெளிவருகின்ற திரவங்களை சாதா ரண திரவங்களில் இருந்து வேறு பிரித்தறிவது?
சாதாரணமாக வெளிவருகிற திரவமானது தெளிவானதாக (CLEAR) எந்த விதமான கெட்ட மனமும் இல்லாததாக இருக்கும். இது அவர்களின் உள்ளாடையில் பட்டு உலரும் போது பால் (MILKY) போன்ற அல்லது தெளிவானதாக இருக்கும். இதுவே வெள்ளை படுதல் என்று நம் பெண்களால் அழைக்கப் படுகிறது.
